நோயாளியின் பார்வையில்
முருகன் மூன்று சக்கர வண்டியில் வேலைக்கு செல்வார். அவர் அன்று வேலையில் இருந்து திரும்பிக் கொண்டு இருந்தார். காலையில் சுந்தரி ( அவரது மனைவி ) , மின் கட்டனம் கட்ட சொல்லி இருந்தாள். கட்டாவிட்டால் கரண்ட் கட் செய்து விடுவார்கள் என்ற எண்ணம், அவரைக் கவலைக்கு ஆக்கியது.
சாலை போக்குவரத்து விளக்கு சிகப்பு நிறத்தில் இருந்த்தது. அவருக்கும் பச்சை நிறத்திற்கு மாறும் வரை காத்திருப்பது ஒரு யுகம் ஆகவே தோன்றியது.
டங் …………………………
மிகப் பெரிய அதிர்வு, சத்தம் காதை துளைத்தது. ஆனால் அந்த வலி, நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பதை போல்………. துடித்து தான் போனார். வலி எங்கே, காலிலா, தோள்பட்டையிலா….இல்லை இல்லை, இரண்டிலும் தான், இடது தோள்பட்டையும் வலது மூட்டிலும்.
முருகன் வலது கால் போலியோ பாதிக்க பட்ட கால், அதனால் தான் அவர் மூன்று சக்கர வண்டியில் பயனம்.
பட்ட காலிலே படும் என்பார்கள், புரிந்தது,
ஆனால் படாத தோள் பட்டையிலுமா!
(தொடரும்)