Translate

Monday, June 20, 2022

நோயாளியின் பார்வையில், from patients point of view part 3

சோமசுந்தரம், தனது ஆபீசில் குமாஸ்தா, ஆபீசுக்கு இரண்டு வருடங்கள் கழித்து நொண்டி நொண்டி வந்தது நினைவுக்கு வந்தது. 


காலை வாக்கிங் சென்றவரை இடித்த வண்டியை கண்டுபிடிக்கவில்லை, சிகிச்சைக்கு பணத்துக்கு சோமசுந்தரத்தின் தம்பி அலைந்ததை முருகன்  மறக்க வில்லை.


சுந்தரி திரும்ப வந்தாள். 


முகம் ஒரு கண்ணாடி என்பார்கள். அவள் முகத்தில் கவலை குறைந்ததா?


ம்ஹும், அதிகம், மிக அதிகம்!


டாக்டர் என்ன சொன்னார்?, முருகன் புருவங்கள் கேள்வியை கேட்டன.


சுந்தரி, அண்ணனிடம் போன் பேசியதை கூறவில்லை. 


முருகனுக்கும், அண்ணனுக்கும்,உள்ள "புரிதலை" நன்கு அறிவாள் சுந்தரி.


ஆயிரங்கள் பேங்கில் அக்கௌன்ட் புத்தகத்தில் பார்த்ததுண்டு. ஆஸ்பத்திரியில் ஒன்றரை இலட்சம் என்று கேட்ட பொது சுந்தரிக்கு தலை சுற்றியது என்னவோ உண்மை தான். 


ராகவிடம் கணக்கு சொல்லி கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. இலட்சத்திற்கு ஐந்து சைபரா, ஆறு சைபரா?




(தொடரும்)




நோயாளியின் பார்வையில், from patients point of view part 2

 ஆஸ்பத்திரிஆம்புலன்ஸ்மானிட்டர் சத்தம்அழும் குழந்தைகவலையான முகங்கள்இது எல்லாம் முருகனுக்கு தெரியும்


"வந்தாள் மஹாலக்ஷ்மி" தொடர் நாடகம் டெலிவிசினில் பார்ப்பார்இரவு ஒன்பது மணி நாடகம்ஒரு நாள் விடாமல் அவரும் சுந்தரியும் பார்க்கும் நாடகம்உண்மையிலேயே நடக்கும் நிகழ்ச்சி போல் எடுக்கப்பட்டு இருக்கும்


சின்னையன் ஒரு சிறு நீரக நோயாளி (நாடகத்தில்). சின்னையனும்  அவரது குடும்பமும் கஷ்டப்படுவதை பார்ப்பதும் அதில் மீண்டு வர அவர்கள் தத்தளிப்பதை டைரக்டர் தத்ரூபமாக எடுத்து இருப்பார்


ஆனால்  தானே சின்னையனை போல் ஆஸ்பத்திரியில் படுத்து இருப்போம் என்று நினைத்திருப்பாரா!, இல்லை, ஒரு போதும் இல்லை...!



"கவலைப்படாதீர்கள்", சுந்தரியின் வார்த்தைகள்அவள் முகத்தின் தோற்றம்இரண்டும் ஒத்து போகவில்லை


ஆறுதலை தேடினார்அவளிடம் கிடைக்கவில்லை


"ராகவ் எங்கே " 


'பக்கத்து வீட்டு பாட்டியிடம் விட்டு வந்தேன்"


"சாப்பிட்டானா?", சுந்தரி தன்னையே கேட்டு கொண்டாள் 


டாக்டர்சுந்தரியை தனியே அழைத்து சென்றார்முருகன் குடும்பத்தில் எந்த முடிவையும் சுந்தரியை எடுக்க விட மாட்டார்


ஆனால் இன்று டாக்டர் ஏன் சுந்தரியை ஏன் தனியாக  கூப்பிட்டு பேசுகிறார்?


போலியோ நோய் பாதித்தும் நடப்பதை நிறுத்தாத முருகன், 


பண கஷ்டம் பற்றி நினைக்காத முருகன், 


இன்று ஆஸ்பத்திரியில் மனத்தில் கேள்விகள், கவலைகள், பயம் என 

அவர் மனத்தில் உணர்வுகள் அலை பாய்கின்றன.


வேலை, பையன் படிப்பு, வீட்டு வாடகை, எதிர் காலம்,?


ஏன், அடுத்த மாதத்தில் அடுப்பு எரியுமா? 


முருகனுக்கு, தெரிகிறது, தோள்பட்டையும், முட்டியும், அசைக்க முடிய வில்லை. 


எலும்பு முறிந்த அடிபட்ட நேரத்திலேயே, உயிர் போகும் மாதிரி இருந்தது.




(தொடரும்)