ஆஸ்பத்திரி, ஆம்புலன்ஸ், மானிட்டர் சத்தம், அழும் குழந்தை, கவலையான முகங்கள், இது எல்லாம் முருகனுக்கு தெரியும்.
"வந்தாள் மஹாலக்ஷ்மி" தொடர் நாடகம் டெலிவிசினில் பார்ப்பார். இரவு ஒன்பது மணி நாடகம். ஒரு நாள் விடாமல் அவரும் சுந்தரியும் பார்க்கும் நாடகம். உண்மையிலேயே நடக்கும் நிகழ்ச்சி போல் எடுக்கப்பட்டு இருக்கும்.
சின்னையன் ஒரு சிறு நீரக நோயாளி (நாடகத்தில்). சின்னையனும் அவரது குடும்பமும் கஷ்டப்படுவதை பார்ப்பதும் அதில் மீண்டு வர அவர்கள் தத்தளிப்பதை டைரக்டர் தத்ரூபமாக எடுத்து இருப்பார்.
ஆனால் தானே சின்னையனை போல் ஆஸ்பத்திரியில் படுத்து இருப்போம் என்று நினைத்திருப்பாரா!, இல்லை, ஒரு போதும் இல்லை...!
"கவலைப்படாதீர்கள்", சுந்தரியின் வார்த்தைகள், அவள் முகத்தின் தோற்றம். இரண்டும் ஒத்து போகவில்லை.
ஆறுதலை தேடினார். அவளிடம் கிடைக்கவில்லை.
"ராகவ் எங்கே "
'பக்கத்து வீட்டு பாட்டியிடம் விட்டு வந்தேன்"
"சாப்பிட்டானா?", சுந்தரி தன்னையே கேட்டு கொண்டாள்
டாக்டர், சுந்தரியை தனியே அழைத்து சென்றார். முருகன் குடும்பத்தில் எந்த முடிவையும் சுந்தரியை எடுக்க விட மாட்டார்.
ஆனால் இன்று டாக்டர் ஏன் சுந்தரியை ஏன் தனியாக கூப்பிட்டு பேசுகிறார்?
போலியோ நோய் பாதித்தும் நடப்பதை நிறுத்தாத முருகன்,
பண கஷ்டம் பற்றி நினைக்காத முருகன்,
இன்று ஆஸ்பத்திரியில் மனத்தில் கேள்விகள், கவலைகள், பயம் என
அவர் மனத்தில் உணர்வுகள் அலை பாய்கின்றன.
வேலை, பையன் படிப்பு, வீட்டு வாடகை, எதிர் காலம்,?
ஏன், அடுத்த மாதத்தில் அடுப்பு எரியுமா?
முருகனுக்கு, தெரிகிறது, தோள்பட்டையும், முட்டியும், அசைக்க முடிய வில்லை.
எலும்பு முறிந்த அடிபட்ட நேரத்திலேயே, உயிர் போகும் மாதிரி இருந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment