Translate

Monday, June 20, 2022

நோயாளியின் பார்வையில், from patients point of view part 3

சோமசுந்தரம், தனது ஆபீசில் குமாஸ்தா, ஆபீசுக்கு இரண்டு வருடங்கள் கழித்து நொண்டி நொண்டி வந்தது நினைவுக்கு வந்தது. 


காலை வாக்கிங் சென்றவரை இடித்த வண்டியை கண்டுபிடிக்கவில்லை, சிகிச்சைக்கு பணத்துக்கு சோமசுந்தரத்தின் தம்பி அலைந்ததை முருகன்  மறக்க வில்லை.


சுந்தரி திரும்ப வந்தாள். 


முகம் ஒரு கண்ணாடி என்பார்கள். அவள் முகத்தில் கவலை குறைந்ததா?


ம்ஹும், அதிகம், மிக அதிகம்!


டாக்டர் என்ன சொன்னார்?, முருகன் புருவங்கள் கேள்வியை கேட்டன.


சுந்தரி, அண்ணனிடம் போன் பேசியதை கூறவில்லை. 


முருகனுக்கும், அண்ணனுக்கும்,உள்ள "புரிதலை" நன்கு அறிவாள் சுந்தரி.


ஆயிரங்கள் பேங்கில் அக்கௌன்ட் புத்தகத்தில் பார்த்ததுண்டு. ஆஸ்பத்திரியில் ஒன்றரை இலட்சம் என்று கேட்ட பொது சுந்தரிக்கு தலை சுற்றியது என்னவோ உண்மை தான். 


ராகவிடம் கணக்கு சொல்லி கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. இலட்சத்திற்கு ஐந்து சைபரா, ஆறு சைபரா?




(தொடரும்)




No comments: