Translate

Sunday, February 19, 2023

the types or methods of physical exercises

உடற் பயிற்சிகளின் அவசியமும் மற்றும் எவ்வாறு உடல் பயிற்சிகள் செய்வது 


 நம் உடலில் உள்ள தசை எலும்பு மூட்டு மண்டலத்தை, இருதயம் போன்ற மற்ற  தானியங்கி அமைப்புகள் போல் இல்லாமல் நாம் தன்னார்வத்தினால் உபயோகிக்க வேண்டியதாகும். நாம் இந்த அமைப்பை கால அளவு அதிகம் விடாமல் உபயோகிக்காமல் இருந்தால், எலும்பு, தசை, மூட்டின் செயல் திறன், கால போக்கில் குறைந்து எலும்பு மூட்டும் தசை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, மூட்டு தேய்மானம், தசை தளர்வுகள், மூட்டு அசைவு குறைபாடுகள் ஆகியவை ஆகும்.


உடல் பயிற்சிகளை எவ்வாறு செய்ய வேண்டும் 


உடல் பயிற்சிகளானவை பல தரப்பட்டவையாகும் 


1. பளு அல்லது திறன் அதிகரிக்க செய்யும் பயிற்சிகள். இவை தசை பருமனை அதிகரித்து நாம் செயல் செய்தலை எளிதாக்கிறது. இதை Muscle strengthening exercises என்று ஆங்கிலத்தில் கூறலாம். உதாரணமாக, நாம் பளு தூக்கி தசைகளுக்கு பயிற்சி கொடுப்பது.வயதாக ஆக, நாம் நமது தசை அளவை இழக்க நேரிடுகிறது. இந்த பயிற்சியின் மூலம் நாம் இந்த இழப்பை குறைத்து, நமது உடலை இளமையாக வைத்து கொள்ள உதவுகின்றன. 


2. மூட்டு இலகு அதிகரிக்கின்ற பயிற்சிகள். இது flexibility exercises ஆகும். நம் உடல் மூட்டுகள் மூலம் முழு அசைவு ஏற்படுத்தி நம்மை மூட்டு வலி மற்றும் தேய்மானத்தை தடுக்கும் பயிற்சிகள் ஆகும். உதாரணமாக, யோகா பயிற்சிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இதனால் நம் தசை பிடிப்பு, மற்றும் முதுகு பிடிப்பு,ஆகிய நோய்களிலில் இருந்து பாதுகாக்கப்பட இயல்கிறது.


3. Endurance training:  இந்த பயிற்சி, நமது தசை மற்றும் இருதயத்தின் ஆற்றலை அதிகரித்து, அதை அவசர  தேவைக்கு  தயார் செய்வதாகும். 

உதாரணமாக, சைக்கிள் ஓட்டுதல் கால் தசைகளுக்கு பலம் கொடுப்பது மட்டும் இல்லாமல் நமது இருதயம் மற்றும் கால் தசைகளின் ஆற்றலை அதிகரிக்கிறது. 


4. balance training: இது சமநிலை பயிற்சியாகும். இதை நாம் யோகா, மற்றும் tai Chi பயிற்சிகள் மூலம் அடையாலம்.இதனால், நாம் தடுமாற்றம் அடைந்து விழுதல், மற்றும் தசை பிடிப்பு ஏற்படுதல்  ஆகியவை குறைக்கலாம்.



நமக்கு நம் வாழ்க்கையில் வேலை பளு இன்றி சுதந்திரமாக உள்ள நேரம் குறைவாக உள்ளது. எவ்வாறு இப்பயிற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்? நம் தினசரி வாழ்க்கையையே உடல் பயிற்சிகளுக்கு உகந்ததாக செயல் படுத்தி கொள்ள முடியும். உதாரணமாக, கடைக்கு செல்ல இயந்திர வாகனம் உபயோகிப்பதை தவிர்த்து, மிதி வாகனம் அல்லது நடந்தோ செல்ல ஒருவரால் இயலும். இதன் மூலம், தசை திறன் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் இருதயம் ஆரோக்கியத்தினுடன் இருக்கும். நமது வீடு வேளைகளில் சுத்தம் செய்வது கை, முழங்கை, தோல் பட்டை பயிற்சிகளாக நாம் வேண்டும்.

"quality of life" and "physical muscle, bone and joints health"

வாழ்க்கைத்தரமும் நமது உடல் ஆரோக்கியமும்.


 வாழ்க்கைத்தரம் என்பது ஒருவருடைய அல்லது ஒரு நாட்டினுடைய மதிப்பீடாக அமைந்து உள்ளது. இது standard of living என்று ஆங்கிலத்தில் சொல்ல படுகிறது. வாழ்க்கைத்தரம் என்பது என்பது நமது வருமானத்தையோ, வசதிகளையோ வைத்து மட்டும் நிர்ணயிப்பதில்லை. நமது உடல் மற்றும் மன நலமின்மை ஆகியவை இந்த வாழ்க்கைத்தரம் வெகுவாக கீழ்நோக்கி சரிய வைத்து விடுகிறது. இந்த குறைபாடு, நமது quality of lifeஐ  பாதித்து நம்மை வாழ்க்கையில் முடக்கி நம் அத்யாவச வேலைகைளையும், பிற வேலைகளையும், பொழுது போக்கு விளையாட்டுகளையும், சமூக அத்யாவச நடமாட்டங்களையும் பாதிக்கிறது.


தம் உடல்  ஆரோக்கியம் இவ்வாறாக பாத்திருப்பதை வெகு சிலரே அறிந்து மருத்துவரிடம் தக்க சமயத்தில் வருகின்றனர். நம் உடல் ஆரோக்கியமாக உள்ளதா?


இப்போது, கீழே உள்ள 12 கேள்விகளை படிக்கவும்:


1. நீங்களாகவே ஆடையை அணிந்து கொள்கிறீர்களா?

2. எந்த வித உதவியின்றி கட்டிலிலிருந்து எழுந்திருக்க முடிகிறதா?

3. தண்ணீர் நிறைந்த டம்ளரை வாயருகே கொண்டு செல்ல முடிகிறதா?

4. கடை தெருவுக்கு சென்று வர முடிகிறதா?

5. எந்த வித உதவியின்றி உங்கள் உடம்பை சுத்தம் செய்து கொள்ள முடிகிறதா?

6. சாதாரண கழிவறையில் அல்லது தரையில் காலை மடித்து உட்கார முடிகிறதா?

7. கீழே குனிந்து துணிகளை எடுக்க முடிகிறதா?

8. தண்ணீர் குழாயை திறந்து மூட முடிகிறதா?

9.பேருந்து / ஆட்டோ இவைகளில் ஏறி இறங்க முடிகிறதா?

10. குறைந்தது 3 கிலோ மீட்டர் நடக்க முடிகிறதா?

11. காய்கறிகள் வாங்குவதற்கு செல்ல முடிகிறதா?

12. மாடிப்படிகளில் ஏறி இறங்க முடிகிறதா?


ஒரு ஆணோ பெண்ணோ தனது வாழ்நாளில் இந்த 12 செயல்பாடுகளை வலி இல்லாமல் செய்ய இயலவில்லை எனில், உடல் ரீதியில் அவரின் வாழ்க்கைத்தரம்  குன்றி இருப்பாதாக அறிந்து கொள்ளலாம். 


இவ்வாறாக, வாழ்க்கை தரம் குன்றி இருப்பதை நாம் அறிந்து, ஐயன் முறை பயிற்சியாளரிடமோ, எழும்பு மூட்டு மருத்துவரிடம் நமது எலும்பு மூட்டு பகுதிகளையும் நமது பொது உடல் சுகாரத்தினையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

What is Vitamin D, information in Tamil language

வைட்டமின் டி என்றால் என்ன?


      வைட்டமின் ஆனது உடலுக்கு தேவையான அதிகப்படியான கூடுதல் சத்துக்கள் மற்றும் நாம் உண்ணும் உணவில் நிறைந்த சத்துக்கள் ஆகும். ஆனால் வைட்டமின் டி என்பது முற்றிலும் வைட்டமின் அல்ல. ஏனென்றால் நமது உடலில் வைட்டமின் டி சத்து உணவு மூலம் மட்டும் இல்லாமல், உடம்பின் தோல் மூலம் சூரிய ஒளியின், உதவியுடன் நாம்  இருந்து பெறுகிறோம்.


இந்த வைட்டமின் D உதவியுடன், நம்  எலும்புகள், தசைகள் வலு பெற்றும்,  உடலில் உள்ள Parathormone போன்ற மாற்று ஹார்மோன்களின் வேலைபாடுகள் சரியாக நடந்தும், நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.


இந்த வைட்டமின் D குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன என்று சற்று இப்போது பார்க்கலாம்.


வைட்டமின் D குறைபாடுகளினால், உடல் தளர்ந்து சோர்வு ஏற்படுவது மக்களினிடையே சாரணமாக இருக்கிறது. எலும்பு தளர்ந்து, இலகுவாக எலும்பு உடைதல், வயதானவர்களில் காணப்படுகிறது. இந்த நோய்க்கு osteomalacia என்று பெயர் உண்டு.


வயதானவர்கள், தமது சாப்பாட்டின் அளவை குறைத்து வரும் பொழுது இவ்வாறான சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஆகையால் நாம் நமது சப்பாட்டின் அளவை குறைக்கும் பொழுது, சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த கால்சியம் அதிகம் உள்ள உணவுகள், பால், தயிர், பாலாடை, சோயா, எள், ராகி எனப்படும் கேழ்வரகு, மற்றும் மீன், முட்டை, நண்டு போன்ற அசைவ உணவுகளும் ஆகும். 


குழந்தைகளிடம் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்பொழுது அவர்களுக்கு எலும்புறுக்கி ( Rickets ) வர நேரிடும். இவற்றினால் குழந்தைகளுக்கு வலிமையற்ற எலும்புகள்,எலும்பு வளைதல், பாத நோய்கள், கால் வலி, பாத வலி மற்றும் பல விதமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இன்றைய நடைமுறையல் மருத்துவர்களின் ஆராய்சியல் விதிப்படி பெரும்பாலான குழந்தைகள் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.


குழந்தைகள் பொருத்தமட்டில் சிறு வயதில் விளையாட்டுகளில் ஈடுபடுவது மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு செயல்படுவதால் ஆரோக்கியமான உடல்கள் ,தசைகள்,மற்றும் வலிமையான எலும்புகளை பெறக் கூடுவார்கள்.உடம்பின் தோல் மேல் சூரிய வெளிச்சம் பட்டு, இயற்கையாகவே , வைட்டமின் D தயாரிக்கப்படுகிறதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாரதியார், சொல்லியது போல், "மாலை முழுவதும் விளையாட்டு" என்று வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

Monday, June 20, 2022

நோயாளியின் பார்வையில், from patients point of view part 3

சோமசுந்தரம், தனது ஆபீசில் குமாஸ்தா, ஆபீசுக்கு இரண்டு வருடங்கள் கழித்து நொண்டி நொண்டி வந்தது நினைவுக்கு வந்தது. 


காலை வாக்கிங் சென்றவரை இடித்த வண்டியை கண்டுபிடிக்கவில்லை, சிகிச்சைக்கு பணத்துக்கு சோமசுந்தரத்தின் தம்பி அலைந்ததை முருகன்  மறக்க வில்லை.


சுந்தரி திரும்ப வந்தாள். 


முகம் ஒரு கண்ணாடி என்பார்கள். அவள் முகத்தில் கவலை குறைந்ததா?


ம்ஹும், அதிகம், மிக அதிகம்!


டாக்டர் என்ன சொன்னார்?, முருகன் புருவங்கள் கேள்வியை கேட்டன.


சுந்தரி, அண்ணனிடம் போன் பேசியதை கூறவில்லை. 


முருகனுக்கும், அண்ணனுக்கும்,உள்ள "புரிதலை" நன்கு அறிவாள் சுந்தரி.


ஆயிரங்கள் பேங்கில் அக்கௌன்ட் புத்தகத்தில் பார்த்ததுண்டு. ஆஸ்பத்திரியில் ஒன்றரை இலட்சம் என்று கேட்ட பொது சுந்தரிக்கு தலை சுற்றியது என்னவோ உண்மை தான். 


ராகவிடம் கணக்கு சொல்லி கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. இலட்சத்திற்கு ஐந்து சைபரா, ஆறு சைபரா?




(தொடரும்)




நோயாளியின் பார்வையில், from patients point of view part 2

 ஆஸ்பத்திரிஆம்புலன்ஸ்மானிட்டர் சத்தம்அழும் குழந்தைகவலையான முகங்கள்இது எல்லாம் முருகனுக்கு தெரியும்


"வந்தாள் மஹாலக்ஷ்மி" தொடர் நாடகம் டெலிவிசினில் பார்ப்பார்இரவு ஒன்பது மணி நாடகம்ஒரு நாள் விடாமல் அவரும் சுந்தரியும் பார்க்கும் நாடகம்உண்மையிலேயே நடக்கும் நிகழ்ச்சி போல் எடுக்கப்பட்டு இருக்கும்


சின்னையன் ஒரு சிறு நீரக நோயாளி (நாடகத்தில்). சின்னையனும்  அவரது குடும்பமும் கஷ்டப்படுவதை பார்ப்பதும் அதில் மீண்டு வர அவர்கள் தத்தளிப்பதை டைரக்டர் தத்ரூபமாக எடுத்து இருப்பார்


ஆனால்  தானே சின்னையனை போல் ஆஸ்பத்திரியில் படுத்து இருப்போம் என்று நினைத்திருப்பாரா!, இல்லை, ஒரு போதும் இல்லை...!



"கவலைப்படாதீர்கள்", சுந்தரியின் வார்த்தைகள்அவள் முகத்தின் தோற்றம்இரண்டும் ஒத்து போகவில்லை


ஆறுதலை தேடினார்அவளிடம் கிடைக்கவில்லை


"ராகவ் எங்கே " 


'பக்கத்து வீட்டு பாட்டியிடம் விட்டு வந்தேன்"


"சாப்பிட்டானா?", சுந்தரி தன்னையே கேட்டு கொண்டாள் 


டாக்டர்சுந்தரியை தனியே அழைத்து சென்றார்முருகன் குடும்பத்தில் எந்த முடிவையும் சுந்தரியை எடுக்க விட மாட்டார்


ஆனால் இன்று டாக்டர் ஏன் சுந்தரியை ஏன் தனியாக  கூப்பிட்டு பேசுகிறார்?


போலியோ நோய் பாதித்தும் நடப்பதை நிறுத்தாத முருகன், 


பண கஷ்டம் பற்றி நினைக்காத முருகன், 


இன்று ஆஸ்பத்திரியில் மனத்தில் கேள்விகள், கவலைகள், பயம் என 

அவர் மனத்தில் உணர்வுகள் அலை பாய்கின்றன.


வேலை, பையன் படிப்பு, வீட்டு வாடகை, எதிர் காலம்,?


ஏன், அடுத்த மாதத்தில் அடுப்பு எரியுமா? 


முருகனுக்கு, தெரிகிறது, தோள்பட்டையும், முட்டியும், அசைக்க முடிய வில்லை. 


எலும்பு முறிந்த அடிபட்ட நேரத்திலேயே, உயிர் போகும் மாதிரி இருந்தது.




(தொடரும்)



Friday, December 25, 2020

நோயாளியின் பார்வையில், from patients point of view,, continued


நோயாளியின் பார்வையில்


முருகன் மூன்று சக்கர வண்டியில் வேலைக்கு செல்வார். அவர் அன்று வேலையில் இருந்து திரும்பிக் கொண்டு இருந்தார். காலையில் சுந்தரி ( அவரது மனைவி ) , மின் கட்டனம் கட்ட சொல்லி இருந்தாள். கட்டாவிட்டால் கரண்ட் கட் செய்து விடுவார்கள் என்ற எண்ணம், அவரைக் கவலைக்கு ஆக்கியது


சாலை போக்குவரத்து விளக்கு சிகப்பு நிறத்தில் இருந்த்தது. அவருக்கும் பச்சை நிறத்திற்கு மாறும் வரை காத்திருப்பது ஒரு யுகம் ஆகவே தோன்றியது


டங் …………………………


மிகப் பெரிய அதிர்வு, சத்தம் காதை துளைத்தது. ஆனால் அந்த வலி, நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பதை போல்………. துடித்து தான் போனார். வலி எங்கே, காலிலா, தோள்பட்டையிலா….இல்லை இல்லை, இரண்டிலும் தான், இடது தோள்பட்டையும் வலது மூட்டிலும்


முருகன் வலது கால் போலியோ பாதிக்க பட்ட கால், அதனால் தான் அவர் மூன்று சக்கர வண்டியில் பயனம்


 பட்ட காலிலே படும் என்பார்கள்புரிந்தது,


ஆனால் படாத தோள் பட்டையிலுமா!



(தொடரும்)



Wednesday, September 30, 2020

Age, wealth and health, the conundrum

 As we grow older as an adult, we tend to become wealthier in general


As personal wealth grows, we tend to spend more on ourselves and our family


This often equates to spending on what we eat


the more we eat, the less healthy we become


we need more money to get our health back to how it should be


we tend to work harder to make ourself wealthier!


hence as age increases, we tend to work harder to be more healthy and wealthy


is it what we aim in life? to work harder as we grow older?


time to pause and think


if you are following my blog actively, then I look forward to your comments