click on this link👇👇
👆👆மேலே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும். (Click ) செய்யவும்
kindly go through this article which highlights the importance of child safety while travelling in a car
General blog with anecdotes for light reading Some Medical content relevant for doctors
click on this link👇👇
👆👆மேலே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும். (Click ) செய்யவும்
kindly go through this article which highlights the importance of child safety while travelling in a car
Musculo skeletal system in tamil
மனித உடல் ஒரு விந்தையான மற்றும் மனிதனின் மிக அதி நவீன முன்னேற்றங்களை ஒன்றுமே இல்லை என்று சொல்ல கூடிய ஒரு கடவுளின் படைப்பாகும். இந்த உடல் விலங்கு செல்கள் (cells) சேர்ந்த பல திசுக்களினால் ஆகிய உறுப்புகளை கொண்டது. பல உறுப்புகள் சேர்ந்து ஒரு குழுவாக இயங்கும் அமைப்புகள் (systems) பல கொண்டது.
உதாரணத்திற்கு, இருதயமும், இரத்த நாளங்களும் ஒரு அமைப்பாக "cardio vascular system" என்று ஆங்கிலத்தில் குறிப்பிட படுகிறது. இந்த அமைப்பு இடை விடாது இரத்த ஓட்டத்தின் மூலம் அனைத்து இருப்புகளுக்கும் oxygen என்ற பிராண வாயுவை கொண்டு சேர்த்து carbon di oxide என்ற கரிய மில வாயுவை நுரையீரல் உதவியுடன் வெளியேற்றுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு அணுக்களாகிய வெள்ளை அணுக்கள் கொண்டு சேர்த்து கிருமிகளிடம் இருந்து திசுக்களை பாதுகாக்கிறது. திசுக்களை சரி செய்ய, எலும்பின் நடுவில் உள்ள marrow என்ற மஜ்ஜையில் இருந்து மூல பொருட்களையும் கொண்டு சேர்க்கிறது.
நுரையீரல் சுவாச அமைப்பு, மூளை நரம்பு அமைப்பு, உணவுப்பை குடல் அமைப்பு போன்ற பல, "autonomic systems என்று சொல்ல கூடிய தானியங்கும் அமைப்புகளால் உடல் இயங்கி வருகிறது. இவை நமது சிந்தனைகள் மற்றும் கட்டளைகள் மூலம் இயங்காது. தானாகவே நம் உயிர் உள்ள வரை இயங்கும். கண், மூக்கு, காது , நாக்கு, உணர்வு, என்ற ஐம்பொறிகள் மற்ற உலக சிந்தனை நியதிகளுக்கு அடிமை பட்டும், நம் சிந்தனை கட்டளைகளுக்கு ஆட்பட்டும், தானியங்கியும் வருகின்றன.
ஆனால், தசை, எலும்பு மூட்டு அமைப்பானது (musculo skeletal system ) இதற்கு ஒரு விதி விலக்காகும். இந்த அமைப்பானது, தானியங்காது. நம் சிந்தனைக்கும், கட்டளைகளுக்கும், ஏற்ப இயங்கும் voluntary system என்று சொல்ல கூடிய தன்னார்வ அமைப்பாகும். இவை நம்மிடம் கட்டளையை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது. இந்த அமைப்பை சற்றும் விரிவாக பார்ப்போம்.
இந்த அமைப்பின் முக்கிய பாகங்கள் எலும்பு, மூட்டு, தசை ஆகும்.
1. எலும்பு
எலும்பின் உள் பாகம் ஒரு தனி அமைப்பாகும். இது, bone marrow கொண்ட hematopoietic system என்ற அமைப்பாகும். எலும்பின் கட்டமைப்பு, ஒரு கட்டிடத்தின் எஹ்கினால்(steel) வலுவூட்டப்பட்ட சுவர் பூச்சு (concrete) போன்ற உறுதியான ஒரு உறுப்பு ஆகும். இது நம் எடையை தாங்கியும், மூட்டின் பாகமாகியு ம், தசைகளுக்கு ஆதாரமாகியும், முக்கிய உறுப்புகளை பாத்து காத்தும் வருகிறது.
2. மூட்டு
மூட்டும் என்பது இரண்டு அல்லது இரண்டுக்கின் மேல் எலும்புகள் சேருமிடம் ஆகும். இந்த மூட்டின் வேலை அசைவு கொடுப்பது ஆகும். எலும்பின் முடிவு பகுதி cartilage என்ற குருத்து பூச்சினால் ஆனது. இந்த கார்டிலேஜ் வழ வழப்பாக இருந்து தாழ்ந்த உராய்வோடு அசைவுக்கு வழி வகுக்கிறது. இது உறுதியானதும் கூட. குதிப்பது, ஓடுவது, விளையாடுவது, பாரம் சுமப்பதை தாங்கும் திறன் கொண்டது. மூட்டின் அசைவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் ligaments என்ற திசை நார்களும், meniscus (பிறை உருவ திசு) போன்ற திசுக்களையம், lubricating oil (மசகு எண்ணை) ஒத்த திரவம், ஆகியவை மூட்டின் வேலையை சீராக்குகின்றன.
3. தசை
தசைகள் என்பன “சுருங்கி எலும்பை இழுத்தும், விரிந்து கொடுத்து எலும்பை தளர்த்தியும்”மூட்டுகளில்
அசைவு ஏற்படுத்துகின்றன.
இந்த அசைவுகள் மூலமே மனிதனின் வாழ்க்கை பண்படுகிறது. நடப்பது, கை கூப்பி வணக்கம் கூறுவது, வேலைகள் பல செய்வது போன்றவை இயல்பாக நடக்க,பல தசைகள் வேலை செய்கின்றன.
இவ்வாறாக நமது தன்னாற்வு அமைப்பாகிய தசை எலும்பு மூட்டமைப்பை நாம் எவ்வாறாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிறிது பார்ப்போமா.
இந்த அமைப்பின் அத்தனை பாகங்களும் உபயோகத்தில் உள்ள வரை பிரச்சினைகள் இன்றி இயங்கி வரும். தன்னார்வினால் தொடர்ந்து எந்த ஒருவர் இந்த அமைப்பின் பாகங்களை இயக்கி வருகிறாரோ அவர், இந்த அமைப்பின் நோய் நொடிகளின்றி வாழ்ந்து வருவார்.
எவ்வாறு இதை செய்வது?
1. நம் வழ்க்கையில் தினம் இன்றியமையாத செயல்களை திறன்பட செய்வது, உதாரணமாக நன்கு உடலின் அனைத்து பாகங்களையும் சேர்த்து குளிப்பது.
2. வேலை பார்க்கும் செயல்கள், உதாரணமாக
மேற்பார்வையாளராக வேலை செய்பவர் “எழுந்து நடந்து குனிந்து நிமிர்ந்து” செயல்படுவது
3. பொழுது போக்கு மற்றும் விளையாட்டு ஈடுபாடுகள் முலம் அசைவு பயிறசிகள், உதாரணமாக பூப்பந்து கைபந்து போன்றவை, நடை பயிற்சி, யோகா பயிற்சி
தசை எலும்பு மூட்டு மண்டல பிரச்சினைகளை எதிர் கொள்வது எப்படி
இந்த அமைப்பின் பாகங்களான தசை, தசை நார், எலும்பு, மூட்டு ஆகியவை பிரச்சினைகளின் முதல் அறிகுறியாக, வலி கொடுக்கின்றன. வலி கொடுத்த விடன், நாம் நம் அசைவையும் நம் இயக்கத்தையும் குறைத்து வழியில் இருந்து விடுபட்டு கொள்கிறோம். இதனால் வலி குறைந்து விடுகிறது. இதனால் நாம் பிரச்சினைகளில் இருந்து விடு பட்டு விட்டோம் என்று செயற்க்கையாக நம்ப தொடங்கி விடுகிறோம்.
நடு தர வயதினர் பலர் இயல்பாக கருதப்படும் தினசரி வேலைப்பாடுகள் கூட செய்யாமல் இதனால் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தரையில் உட்காருவதில்லை, தினசரி நடப்பதில்லை, குனிந்து நிமிர்ந்து செயல் பாடுகள் ஈடுபடுவதில்லை. குழந்தைகள் பலர் உடல் பருமன் ஏற்பட்டு, சுகாதாரம் குறைந்து காண படுகின்றனர்.
இந்த அமைப்பில் வலி ஏற்படுவது முக்கால்வாசி அளவுக்கு மேல், நமது வாழ்க்கை முறை குறைப்பாடுகள் தான் காரணமாகும். முடக்கு வாதம், தைராய்டு மற்றும் வைட்டமின் D குறைபாடுகள், நோய் கிருமிகள் தாக்கம், மரபணு குறைபாடுகள், அடி பட்டு பின் விளைவுகளாக ஏற்படும் குறைபாடுகள், வயதாகி வரும் உபயோக நோய்கள் என்று பல தரப்பட்ட காரணங்கள் வலிக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு.
ஆகவே, நாம் நமது தசை, எலும்பு, மூட்டு அமைப்பை தினம் உபயோகப்படுத்தி, வலி ஏற்பட்டால், நமது அசைவையும் செயல் பாடுகளை சுத்தமாக குறைப்பதை தவிர்த்து, இயன் முறை பயிற்சிகளில் ஈடுபட்டு, ஆரோக்கியத்தோடு இருப்பது அவசியம். தொடர்ந்து வலி மாத்திரைகளை சாப்பிடுவது தவிர்த்து, தகுந்த மருத்துவத்தை நாடுவதே சிறந்ததாகும்.
திருவள்ளுவர் கூறியது போல் " நோய் நாடி" " நோய் முதல் நாடி", தகுந்த காரணம் கண்டு அதற்கு, " அது தணிக்கும் வாய் நாடி" வைத்தியம் செய்வதே தகுந்த மருத்துவமாகும்.
இவ்வாறாக செய்யும் உடல் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகள் பல
தகுந்த கால இடை வெளியோடு செய்யப்படும் உடல் பயிற்சியானது
1. நமக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கிறது
2. நமது உடலில் சில நோய்கள் வராமல் மற்றும் வந்த நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
3. நோயில்லா தசை மூட்டில் ஏற்படும் வலியை தவிர்க்க உதவுகின்றது.
4. நன்கு தூக்கம் வர வழி செய்கிறது.
5. உடல் எடையை தகுந்த அளவோடு வைத்திருக்க உதவுகின்றது
6. நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு இருக்க வைத்திருக்கின்றது.
7. சூரிய ஒளியின் அடியில் செய்யப்படும் போது, வைட்டமின் D தயாரிக்கப்பட்டு, உடல் அணுக்கள் அனைத்தும் நன்றாக செயல் பட உதவுகின்றது.
8.தோல் நோய் வருவதை தடுக்கின்றது.
9. மூளை திறன் அதிகரிக்கின்றது.
உடற் பயிற்சிகளின் அவசியமும் மற்றும் எவ்வாறு உடல் பயிற்சிகள் செய்வது
நம் உடலில் உள்ள தசை எலும்பு மூட்டு மண்டலத்தை, இருதயம் போன்ற மற்ற தானியங்கி அமைப்புகள் போல் இல்லாமல் நாம் தன்னார்வத்தினால் உபயோகிக்க வேண்டியதாகும். நாம் இந்த அமைப்பை கால அளவு அதிகம் விடாமல் உபயோகிக்காமல் இருந்தால், எலும்பு, தசை, மூட்டின் செயல் திறன், கால போக்கில் குறைந்து எலும்பு மூட்டும் தசை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, மூட்டு தேய்மானம், தசை தளர்வுகள், மூட்டு அசைவு குறைபாடுகள் ஆகியவை ஆகும்.
உடல் பயிற்சிகளை எவ்வாறு செய்ய வேண்டும்
உடல் பயிற்சிகளானவை பல தரப்பட்டவையாகும்
1. பளு அல்லது திறன் அதிகரிக்க செய்யும் பயிற்சிகள். இவை தசை பருமனை அதிகரித்து நாம் செயல் செய்தலை எளிதாக்கிறது. இதை Muscle strengthening exercises என்று ஆங்கிலத்தில் கூறலாம். உதாரணமாக, நாம் பளு தூக்கி தசைகளுக்கு பயிற்சி கொடுப்பது.வயதாக ஆக, நாம் நமது தசை அளவை இழக்க நேரிடுகிறது. இந்த பயிற்சியின் மூலம் நாம் இந்த இழப்பை குறைத்து, நமது உடலை இளமையாக வைத்து கொள்ள உதவுகின்றன.
2. மூட்டு இலகு அதிகரிக்கின்ற பயிற்சிகள். இது flexibility exercises ஆகும். நம் உடல் மூட்டுகள் மூலம் முழு அசைவு ஏற்படுத்தி நம்மை மூட்டு வலி மற்றும் தேய்மானத்தை தடுக்கும் பயிற்சிகள் ஆகும். உதாரணமாக, யோகா பயிற்சிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இதனால் நம் தசை பிடிப்பு, மற்றும் முதுகு பிடிப்பு,ஆகிய நோய்களிலில் இருந்து பாதுகாக்கப்பட இயல்கிறது.
3. Endurance training: இந்த பயிற்சி, நமது தசை மற்றும் இருதயத்தின் ஆற்றலை அதிகரித்து, அதை அவசர தேவைக்கு தயார் செய்வதாகும்.
உதாரணமாக, சைக்கிள் ஓட்டுதல் கால் தசைகளுக்கு பலம் கொடுப்பது மட்டும் இல்லாமல் நமது இருதயம் மற்றும் கால் தசைகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.
4. balance training: இது சமநிலை பயிற்சியாகும். இதை நாம் யோகா, மற்றும் tai Chi பயிற்சிகள் மூலம் அடையாலம்.இதனால், நாம் தடுமாற்றம் அடைந்து விழுதல், மற்றும் தசை பிடிப்பு ஏற்படுதல் ஆகியவை குறைக்கலாம்.
நமக்கு நம் வாழ்க்கையில் வேலை பளு இன்றி சுதந்திரமாக உள்ள நேரம் குறைவாக உள்ளது. எவ்வாறு இப்பயிற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்? நம் தினசரி வாழ்க்கையையே உடல் பயிற்சிகளுக்கு உகந்ததாக செயல் படுத்தி கொள்ள முடியும். உதாரணமாக, கடைக்கு செல்ல இயந்திர வாகனம் உபயோகிப்பதை தவிர்த்து, மிதி வாகனம் அல்லது நடந்தோ செல்ல ஒருவரால் இயலும். இதன் மூலம், தசை திறன் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் இருதயம் ஆரோக்கியத்தினுடன் இருக்கும். நமது வீடு வேளைகளில் சுத்தம் செய்வது கை, முழங்கை, தோல் பட்டை பயிற்சிகளாக நாம் வேண்டும்.
வாழ்க்கைத்தரமும் நமது உடல் ஆரோக்கியமும்.
வாழ்க்கைத்தரம் என்பது ஒருவருடைய அல்லது ஒரு நாட்டினுடைய மதிப்பீடாக அமைந்து உள்ளது. இது standard of living என்று ஆங்கிலத்தில் சொல்ல படுகிறது. வாழ்க்கைத்தரம் என்பது என்பது நமது வருமானத்தையோ, வசதிகளையோ வைத்து மட்டும் நிர்ணயிப்பதில்லை. நமது உடல் மற்றும் மன நலமின்மை ஆகியவை இந்த வாழ்க்கைத்தரம் வெகுவாக கீழ்நோக்கி சரிய வைத்து விடுகிறது. இந்த குறைபாடு, நமது quality of lifeஐ பாதித்து நம்மை வாழ்க்கையில் முடக்கி நம் அத்யாவச வேலைகைளையும், பிற வேலைகளையும், பொழுது போக்கு விளையாட்டுகளையும், சமூக அத்யாவச நடமாட்டங்களையும் பாதிக்கிறது.
தம் உடல் ஆரோக்கியம் இவ்வாறாக பாத்திருப்பதை வெகு சிலரே அறிந்து மருத்துவரிடம் தக்க சமயத்தில் வருகின்றனர். நம் உடல் ஆரோக்கியமாக உள்ளதா?
இப்போது, கீழே உள்ள 12 கேள்விகளை படிக்கவும்:
1. நீங்களாகவே ஆடையை அணிந்து கொள்கிறீர்களா?
2. எந்த வித உதவியின்றி கட்டிலிலிருந்து எழுந்திருக்க முடிகிறதா?
3. தண்ணீர் நிறைந்த டம்ளரை வாயருகே கொண்டு செல்ல முடிகிறதா?
4. கடை தெருவுக்கு சென்று வர முடிகிறதா?
5. எந்த வித உதவியின்றி உங்கள் உடம்பை சுத்தம் செய்து கொள்ள முடிகிறதா?
6. சாதாரண கழிவறையில் அல்லது தரையில் காலை மடித்து உட்கார முடிகிறதா?
7. கீழே குனிந்து துணிகளை எடுக்க முடிகிறதா?
8. தண்ணீர் குழாயை திறந்து மூட முடிகிறதா?
9.பேருந்து / ஆட்டோ இவைகளில் ஏறி இறங்க முடிகிறதா?
10. குறைந்தது 3 கிலோ மீட்டர் நடக்க முடிகிறதா?
11. காய்கறிகள் வாங்குவதற்கு செல்ல முடிகிறதா?
12. மாடிப்படிகளில் ஏறி இறங்க முடிகிறதா?
ஒரு ஆணோ பெண்ணோ தனது வாழ்நாளில் இந்த 12 செயல்பாடுகளை வலி இல்லாமல் செய்ய இயலவில்லை எனில், உடல் ரீதியில் அவரின் வாழ்க்கைத்தரம் குன்றி இருப்பாதாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறாக, வாழ்க்கை தரம் குன்றி இருப்பதை நாம் அறிந்து, ஐயன் முறை பயிற்சியாளரிடமோ, எழும்பு மூட்டு மருத்துவரிடம் நமது எலும்பு மூட்டு பகுதிகளையும் நமது பொது உடல் சுகாரத்தினையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி என்றால் என்ன?
வைட்டமின் ஆனது உடலுக்கு தேவையான அதிகப்படியான கூடுதல் சத்துக்கள் மற்றும் நாம் உண்ணும் உணவில் நிறைந்த சத்துக்கள் ஆகும். ஆனால் வைட்டமின் டி என்பது முற்றிலும் வைட்டமின் அல்ல. ஏனென்றால் நமது உடலில் வைட்டமின் டி சத்து உணவு மூலம் மட்டும் இல்லாமல், உடம்பின் தோல் மூலம் சூரிய ஒளியின், உதவியுடன் நாம் இருந்து பெறுகிறோம்.
இந்த வைட்டமின் D உதவியுடன், நம் எலும்புகள், தசைகள் வலு பெற்றும், உடலில் உள்ள Parathormone போன்ற மாற்று ஹார்மோன்களின் வேலைபாடுகள் சரியாக நடந்தும், நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
இந்த வைட்டமின் D குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன என்று சற்று இப்போது பார்க்கலாம்.
வைட்டமின் D குறைபாடுகளினால், உடல் தளர்ந்து சோர்வு ஏற்படுவது மக்களினிடையே சாரணமாக இருக்கிறது. எலும்பு தளர்ந்து, இலகுவாக எலும்பு உடைதல், வயதானவர்களில் காணப்படுகிறது. இந்த நோய்க்கு osteomalacia என்று பெயர் உண்டு.
வயதானவர்கள், தமது சாப்பாட்டின் அளவை குறைத்து வரும் பொழுது இவ்வாறான சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஆகையால் நாம் நமது சப்பாட்டின் அளவை குறைக்கும் பொழுது, சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த கால்சியம் அதிகம் உள்ள உணவுகள், பால், தயிர், பாலாடை, சோயா, எள், ராகி எனப்படும் கேழ்வரகு, மற்றும் மீன், முட்டை, நண்டு போன்ற அசைவ உணவுகளும் ஆகும்.
குழந்தைகளிடம் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்பொழுது அவர்களுக்கு எலும்புறுக்கி ( Rickets ) வர நேரிடும். இவற்றினால் குழந்தைகளுக்கு வலிமையற்ற எலும்புகள்,எலும்பு வளைதல், பாத நோய்கள், கால் வலி, பாத வலி மற்றும் பல விதமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இன்றைய நடைமுறையல் மருத்துவர்களின் ஆராய்சியல் விதிப்படி பெரும்பாலான குழந்தைகள் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் பொருத்தமட்டில் சிறு வயதில் விளையாட்டுகளில் ஈடுபடுவது மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு செயல்படுவதால் ஆரோக்கியமான உடல்கள் ,தசைகள்,மற்றும் வலிமையான எலும்புகளை பெறக் கூடுவார்கள்.உடம்பின் தோல் மேல் சூரிய வெளிச்சம் பட்டு, இயற்கையாகவே , வைட்டமின் D தயாரிக்கப்படுகிறதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாரதியார், சொல்லியது போல், "மாலை முழுவதும் விளையாட்டு" என்று வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.